பறவையால் தீப்பற்றிய FedEx விமானம்.

FedEx சரக்கு விமானம் பறவையுடன் மோதியதில் தீப்பற்றியது.

நேற்று (1 மார்ச்) காலை அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி (New Jersey) மாநிலத்தின் நியூவர்க் (Newark) நகரிலிருந்து விமானம் புறப்பட்டபோது அந்தச் சம்பவம் நடந்தது.

யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.

விமானம் நியூவர்க் liberty அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானம் புறப்படும்போது அது பறவையுடன் மோதியதால் போயிங் 767 ரக விமானத்தின் இயந்திரம் சேதமடைந்தது.

விமானம் இண்டியானாபொலிஸ் (Indianapolis) நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் விமானம் புறப்பட்ட விமான நிலையத்திற்கே திரும்பியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சம்பவம் நேர்ந்தவுடன் ஆகாயப் போக்குவரத்து சற்று நேரம் நிறுத்தப்பட்டதாகப் பேச்சாளர் ஒருவர் Associated Press செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆனால் சிறிது நேரம் கழித்துச் செயல்பாடுகள் வழக்கநிலைக்குத் திரும்பின.

Leave A Reply

Your email address will not be published.