97வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் நடிகர் கீரன் கல்கின் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.

2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஸ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் கீரன் கல்கின் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஸ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது விருது பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:
* ஜெஸ்ஸி ஐசன்பெர்க் இயக்கிய எ ரியல் பெயின் படத்திற்காக நடிகர் கீரன் கல்கின் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.
* சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘FLOW’ வென்றது.
* சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘IN THE SHADOW OF CYPRESS’ வென்றது.
* சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ‘WicKed’ திரைப்படத்திற்காக Paul Tazewell வென்றார். இதன் மூலம், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்றுள்ளார் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
* சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை Conciave படத்திற்காக Peter Straughan வென்றார்.
* சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை அனோரா படத்திற்காக சீன் பேக்கர் வென்றார்.
* சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை ‘THE SUBSTANCE’ திரைப்படம் தட்டிச் சென்றது.
* இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த பிரியங்கா சோப்ரா- குனீத் மோங்காவின் அனுஜா குறும்படம் விருதை தவறிவிட்டது. இந்தப் பிரிவில் I’M Not A Robot என்ற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது.
* சிறந்த துணை நடிகைக்கான விருதை Emilia Perez படத்துக்காக Zoe Saldana வென்றார்.
* சிறந்த ஒலி, சிறந்த காட்சிகள் என 2 பிரிவுகளில், ஆஸ்கர் விருதை Dune இரண்டாம் பாகம் தட்டி சென்றது.
* ‘The Brutalist’ திரைப்படத்திற்காக Lol Crawley சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்றுள்ளார்.
* சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை அமெரிக்க நடிகர் Adrien Brody ஆஸ்கர் விருதினை வென்றார். இவர் 2002ம் ஆண்டில் தி பியானிஸ்ட் படத்திற்காக 29 வயதிலேயே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
5 விருதுகள் வென்ற ‘அனோரா’
‘அனோரா’ திரைப்படம் 5 விருதுகளை வென்றது. சிறந்த படத்தொகுப்பு, திரைக்கதை, திரைப்படம், இயக்குனர், நடிகை என முக்கிய பிரிவுகளில் விருதுகளை வென்று அசத்தி உள்ளது.
கவனம் ஈர்த்த நடிகை!
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், பிங்க் நிற உடையில் பங்கேற்ற பாடகியும், நடிகையுமான அரியானா கிராண்டேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியானா கிராண்டே லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேடையில் பாடினார்.