மக்களின் எதிர்வினையை அறிய நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் கைது!

பல பொலிஸ் அதிகார எல்லைகளைத் தாண்டி நுக்கேகொடையிலிருந்து கடுங்கன்னாவை வரை வந்தார்… நிர்வாணமாகச் செல்லும் ஒருவரை கண்டு சுற்றியிருப்பவர்கள் காட்டும் எதிர்வினையைப் பார்க்க விரும்பினாராம்…. கைதான இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்த கருத்து!
உடம்பில் ஒரு நூல் கூட இல்லாமல் நிர்வாணமாக நுக்கேகொடையிலிருந்து கண்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞரை கடுங்கன்னாவவில் வீதித் தடைகளை அமைத்து கடுங்கன்னாவ பொலிஸார் கைது செய்தனர்.
நுக்கேகொடையிலிருந்து பல பொலிஸ் அதிகார எல்லைகளை நிர்வாணமாகக் கடந்து கடுங்கன்னா வரை வந்த இந்த இளைஞர் தலைக்கவசம் கூட அணியாமல் வந்தது குறிப்பிடத்தக்கது.
கேகாலை பொலிஸிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்ய கடுங்கன்னாவ பொலிஸார் வீதித் தடைகளை அமைத்தனர்.
அகங்கமவைச் சேர்ந்த இந்த நபர், நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் ஒருவரை நோக்கி மக்கள் என்ன மாதிரியான எதிர்வினையை காட்டுகிறார்கள் என்பதைப் பார்க்கவே இந்த பயணம் வந்ததாக கடுங்கன்னாவ பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அவரை கைது செய்த கடுங்கன்னாவ பொலிஸார், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மனநல மருத்துவ அறிக்கையைப் பெற்ற பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் தெரிவித்துள்ளனர்.