மட்டக்களப்பில் வியாபாரி கொலை – நால்வர் கைது!

2025.03.03 அன்று இரவு மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் கல்லடி பாலம் அருகே சாலையில் ஒருவர் தாக்கப்பட்டதில் காயமடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இறந்தவர் 31 வயதான பேத்தாளை, வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்.
இறந்தவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தவர் என்றும், மற்றவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் அவர்கள் தாக்கியதில் இந்த கொலை நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குற்றம் தொடர்பாக 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 24, 28 மற்றும் 50 வயதுடைய மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இறந்தவரது உடல் மட்டக்களப்பு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.