டெல்லியில் தேர்விற்குப் பயந்து ஓடிப்போன சிறுவன் 2,000 கி.மீ. பயணம் செய்த அதிர்ச்சி சம்பவம்!

தேர்விற்குப் பயந்து ஓடிப்போன சிறுவன் 2,000 கி.மீ. பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், கடந்த மாதம் 21-ம் தேதி பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை . இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடி அலைந்தனர்.

அப்போது 11-ம் வகுப்பு இறுதி தேர்வு எழுத தனக்கு மனம் இல்லை என்பதால் வீட்டை விட்டுச் செல்வதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என்று தந்தைக்கு மெசேஜோஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் நிலைகுலைந்து போன பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2000 கிமீ தூரம் பயணம் செய்து தமிழகம் – கர்நாடக எல்லை அருகே உள்ள கிருஷ்ணகிரி பகுதியில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்.

அதனைத் தொடர்ந்து அங்குச் சென்ற காவல்துறையினர் அவரை மீட்டனர். இது குறித்து காவல்துறை துணை ஆணையர் விக்ரம் சிங் கூறுகையில், சிறுவனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தல் நடக்க வாய்ப்புள்ளதால், அவரைக் கண்காணிக்க காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டன.

பெங்களூரில் தனக்குத் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு அங்கு ரயிலில் சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் கிருஷ்ணகிரியில் கட்டுமானப் பணிக்கான வேலை விளம்பரத்தைப் பார்த்த அவர், வேறு ரயிலில் சென்று அங்கு வேலை சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.