நீதிமன்றத்தில் சரணடைந்த பதில் ஓ.ஐ.சி.க்கு பிணை.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (04) காலை சரணடைந்த வெலிகம பொலிஸ் பதில் நிலைய பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை தலா 5 லட்சம் ரூபாய் தனிநபர் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலிகம பலான பகுதியில் உள்ள ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸ் பதில் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சந்தேக நபரான வெலிகம பொலிஸ் பதில் நிலைய பொறுப்பதிகாரியின் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (05) கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.