மித்தேனிய கொலை வழக்கில் வீரகெட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது…

மித்தேனிய முக் கொலை வழக்கில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று முன்தினம் (03) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தேனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு இந்த சந்தேக நபரை வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் கைது செய்துள்ளது. சந்தேக நபரான கான்ஸ்டபிள் 36 வயது ஜுலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்.
இந்த சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களுக்கு 12 டி-56 தோட்டாக்களை வழங்கியிருப்பது தற்போது நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கடந்த 18ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக இதுவரை 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.