பொதுமக்களின் வேலைகளை செய்யவில்லை என பிரதேச செயலகத்தில் பொருட்களை உடைத்து நாசம் செய்த நபர்.(வீடியோ)

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு வந்த நபர், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அவர் வந்த வேலை நடக்காததால் கோபமடைந்து இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அங்கு இருந்த அரசு அதிகாரிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர், மேலும் அந்த ரகளையில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயற்சித்தனர்.

தனது தந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகலைப் பெற பிரதேச செயலகத்திற்கு சென்றபோது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த நபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.