நுவரெலியா தபால் நிலையம் சுற்றுலா மையமாக மாறும் – நலிந்த

நுவரெலியா, கண்டி, கொழும்பு, காலி போன்ற இடங்களில் உள்ள சில தபால் நிலையங்களை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாற்றும் திட்டம் தொடங்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அந்த அமைச்சின் செலவினத் தலைப்பில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.
“சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நுவரெலியா, கண்டி, கொழும்பு, காலி போன்ற இடங்களில் உள்ள தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். எங்களது பிரதான தபால் தலைமையகங்களில் உள்ள அருங்காட்சியகங்களை மேலும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.