ரணில் கொடிதொரு கார் விபத்தில் சிக்கியுள்ளார்… – பிமல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்…

ஃபெராரி கார்களை ஓட்ட லைசென்ஸ் இருப்பதாகக் கூறிய நபர் , அல் ஜசீரா தொலைக்காட்சியில் கொடிய கார் விபத்தில் சிக்கியதாக சபை தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட அல் ஜசீரா ஊடக கலந்துரையாடல் குறித்து அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
“இன்றைய விவாதம் மிகவும் வருத்தமான செய்தியுடன் தொடங்குகிறது. அது சமீபத்தில் நடந்த கொடிய கார் விபத்து பற்றிய அறிவிப்பு. ஃபெராரி லைசென்ஸ் இருப்பதாகக் கூறிய நபர் , அல் ஜசீராவில் மோதி நொறுங்கிவிட்டார். அவரது மூளைக்கு நிறைய சேதம் ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். அவர் உளறுகிறார்.” என்றார் பிமல் ரத்நாயக்க .