என்னைப் போல் எவரும் இல்லை. இனி இருக்கவும் வாய்ப்பில்லை: இளையராஜா.

இசையமைப்பாளர் இளையராஜா சிம்ஃபனி (Symphony) இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றுள்ளார்.

அவர் நாளை (8 மார்ச்) தமது முதல் சிம்ஃபனி இசையை அரங்கேற்றம் செய்யவிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இளையராஜா லண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்கள் சிலரைச் சென்னை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார்.

“எனது முதல் symphony இசையை நாளை வெளியிடவிருக்கிறேன். இது எனக்கு மட்டும் பெருமை அல்ல. இந்தியாவுக்கே பெருமை. இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். Incredible இந்தியாவைப் போன்று நான் Incredible இளையராஜா. என்னைப் போல் எவரும் இல்லை. இனி இருக்கவும் வாய்ப்பில்லை,” என்றார் இளையராஜா.

Leave A Reply

Your email address will not be published.