சாம்பியன்ஸ் டிராபி , துபாய் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இன்று நடக்கும் பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பை வெல்ல காத்திருக்கிறது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகளும் சோபிக்க தவறின.

இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. 2000ல் நியூசிலாந்து கோப்பை கைப்பற்றியது. இதற்கு இந்தியா இன்று பதிலடி கொடுக்கலாம்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை மோதின. இம்முறை நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 60.06 கோடி. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 19.49 கோடி கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 9.74 கோடி பெறும்.

லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் மோதலில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், புதுப்பிக்கப்பட்டு, 14 நாளுக்குப் பின் இன்றைய பைனலுக்கு தயாராகியுள்ளது.

அப்போது பாகிஸ்தான் 241/10 ரன் எடுத்தது. குல்தீப் 3, பாண்ட்யா 2 விக்கெட் சாய்த்தனர். பின் இந்திய அணி 244/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இன்றும் ஆடுகளத்தில் பந்துகள் அதிகம் சுழலலாம். ‘ஸ்பின்னர்’கள் சாதிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.