2000 கோடி சொத்துக்கு அதிபதி.. சினிமாவில் ரீ என்ட்ரி.

உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ரம்பா. தமிழ் திரை ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும், செல்லமாக தொடையழகி ரம்பா என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரம்பாவின் சொத்து மதிப்பை கேட்டால் அசந்து போவீங்க. ரம்பா சொல்லவில்லை ரஜினியை வைத்து வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி தானுவே இந்த விசயத்தை தெரிவித்துள்ளார். பலகோடி சொத்துக்கு அதிபதியாக இருப்பதாக கலைப்புலி தாணூ கூறியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் கோடிகளில் சம்பாதித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், நடிகைகளின் சொத்து மதிப்பை விட நடிகர்களின் சொத்து மதிப்பு விரல் விட்டு எண்ண முடியாத தொகையாக இரு மடங்காக உயர்ந்திருக்கும். நடிகர்களை பொறுத்தவரை திருமணத்திற்கு பின்பும் சினிமா வாய்ப்புகள் குறைவதில்லை. ஆனால், சினிமாவிற்கு பிறகு நடிகைகளுக்கான வாய்ப்பு சொற்பம் தான். விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகைகள் தான் சினிமாவில் திருமணத்திற்கு பின்பும் ஜொலிக்கின்றனர். ஆனால், நடிகைகளில் ஒருவரின் சொத்து மதிப்புதான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அது வேறும் யாரும் இல்லைங்க நம்ம ரம்பா தான்.

திருமணம்: 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா. அந்த பெயரை கேட்டால் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழும், அவரது தொடை அழகும் தான் நினைவுக்கு வரும். நவரச நாயகன் கார்த்திக், விஜய், அஜித், ரஜினி என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். பின்னர், இலங்கையை சேர்ந்த இந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவரது கணவரின் சொத்து மதிப்புதன் மலைக்க வைக்கிறது.

சொத்து மதிப்பு: தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களின் சொத்து மதிப்பை இங்கு காணலாம். இதில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா… சாரி நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.183 கோடி என கூறப்படுகிறது. பான் இண்டியா அளவில் டிரெண்டாகி வரும் நடிகை தமன்னா. அவரது சொத்து மதிப்பு 110 கோடி தான். பாகுபலி பட நாயகி அனுஷ்காவின் சொத்து மதிப்பு 110 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதுக்கு மேலும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு ரூ.85 கோடி. சமந்தா 80 கோடி, காஜல் 60 பிளஸில் இருக்கிறார். இவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்திருப்பது ரம்பா தானாம்.

2000 கோடி: இன்று சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு அனைவருக்கம் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து பேசினார். அப்போது ரம்பாவை பார்த்ததும் பூரித்து போன அவரது கண்கள், இங்கு நான் ஒரு உண்மையை சொல்கிறேன். ரம்பா சாதாரண ஆள் இல்லை சுமார் ரூ.2,000 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார். ரம்பா இல்லை அவரது கணவரின் சொத்து மதிப்பு என தெரிவித்ததும் ரம்பா இன்ப அதிர்ச்சி அடைந்து ஐயோ உண்மையை சொல்லிட்டாரே என்ற பார்வையில் கையை எடுத்து கண்களை மூடிக் கொண்டார் ரம்பா.

ரீ என்ட்ரி: பின்பு பேசிய கலைப்புலி தாணு, ரம்பா நடிகை மட்டும் அல்ல அவர் எனக்கு மகள். அவரது கணவர் இந்திரனுடன் பேசும்போது வீட்டிலேயே ரம்பா இருப்பதால் போர் அடிக்கும் என நினைக்கிறேன். இதனால், மீண்டும் நடிக்கும் வாய்ப்பை நீங்கள் அளிக்க வேண்டும் என ரம்பாவின் கணவர் தன்னிடம் கூறியதாக தாணு தெரிவித்தார். கவலைப்படாதம்மா நீ படம் தயாரிக்க வேண்டாம். நல்ல கதை வரும்போது நானே உன்னை அழைக்கிறேன் என தாணு ரம்பாவை பார்த்து தெரிவித்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 90களில் இளைஞர்களை கவர்ந்த ரம்பா பலகோடிக்கு அதிபதி என்ற செய்தி தான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.