ரஷ்யாமீது கூடுதல் தடை உத்தரவுகளும் வரிகளும் விதிக்கப்படும்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ரஷ்யாமீது கூடுதல் தடை உத்தரவுகளையும் வரிகளையும் விதிக்கப்போவதாக
மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்ய, உக்ரேன் போரில் அமைதியைக் கொண்டுவர அவர் முனைகிறார்.
உக்ரேனுடன் பணியாற்றுவதைக் காட்டிலும் ரஷ்யாவுடன் பணியாற்றுவது மேலும் எளிதானது என்றார் அவர்.
உக்ரேனுக்கு இதுவரை வழங்கிய ராணுவ உதவிகளையும்
அதனுடன் பகிர்ந்துகொண்ட உளவுத் தகவல்களையும்
தற்காலிகமாக நிறுத்தியபிறகு அமெரிக்கா ரஷ்யாவுக்கு
எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அமைதிப்பேச்சுக்காக அமெரிக்க அதிகாரிகளை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்க்கி (Volodymyr Zelenskyy) சவுதி அரேபியாவில் அடுத்த சில நாள்களில் சந்திக்கவிருக்கிறார்.