150 ரேஞ்ச் ரோவர்களுக்கு ஓர்டர்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, மிக உயர்ந்த ரக வாகனமாக கருதப்படும் புதிய ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது சுமார் 150 ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு ஓர்டர் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதி சொகுசு பிரிவில் உள்ள ரேஞ்ச் ரோவர் காரின் விலை தற்போது சுமார் 147 மில்லியன் ரூபாய் அல்லது 1470 லட்சம் ரூபாய் ஆகும்.
தற்போது முகவர் நிறுவனங்களால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்த வாகனங்கள் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும்.