ரோயல், இசிபதன, டீஎஸ் கொழும்பு தேசிய கல்லூரிகளில் தமிழ் பிரிவு வகுப்புகளை கூட்டுங்கள்! சபையில் மனோ கணேசன் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரினியிடம் கோரிக்கை.

கொழும்பின் பிரபல வளமான தேசிய பாடசாலைகளில் தமிழ் மொழிமூல பிரிவு வகுப்புகள் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப, இடைநிலை, உயர்தர பிரிவுகளில் சிங்கள பிரிவு வகுப்புகள் பெருந்தொகை இருக்கும் போது தமிழ் பிரிவு வகுப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கின்றன.
இதன் மூலம் இந்த வளமான பாடசாலைகளில் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான சந்தர்ப்பங்கள் மறுக்க படுகின்றன.
இந்நிலைமை கொழும்பின் ரோயல், இசிபதன, டீஎஸ் சேனநாயக்க கல்லூரிகளில் நிலவுகின்றது.
https://we.tl/t-y32vbI94vf