அரசியல்வாதி ஒருவர் ஆயுதங்களுடன் கைது… மேலும் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை தேட நடவடிக்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தனவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அத்தனகல்ல பகுதியில் உள்ள அவரது நிலத்தில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டி 56 துப்பாக்கி, இரண்டு மேகஸின்கள், 130 வெடிமருந்துகள், 12 போர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மேலும் துப்பாக்கிகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.