அனுராதபுரம் பாலியல் பலாத்காரத்திற்கு கண்டனம்: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபரை இன்று காலை 8 மணிக்குள் கைது செய்யாவிட்டால் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என நேற்று மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி, 24 மணி நேரம் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும். அவசர சிகிச்சை, குழந்தைகள் நலன், சிறுநீரகம் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகள் வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் உள்ள தனது குடியிருப்பில் அப்பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரை தேடி பல விசாரணை குழுக்கள் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளன.