விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஸ்வீடன் பயணி கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பயணி, விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்ச் 11, அன்று இரவு மும்பையில் இருந்து கொழும்பு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் யு.எல். 144ல் , இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் இலங்கையின் வான் எல்லைக்குள் நுழைந்ததும், மது போதையில் இருந்த பயணி , பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
விமான நிலைய போலீசார் அந்த பயணியை கைது செய்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக அவர் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பயணி 65 வயது ஸ்வீடன் நாட்டு குடியுரிமை உள்ள வடக்கு பகுதி இலங்கையர் ஆவார்.
கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் தனூஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்ட பயணி, தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், அவரது வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.