குஜராத்தில் காதல் விவகாரத்தில் மகளை ஆணவக்கொலை செய்த தந்தை!

குஜராத்தில் வேறு சாதியைச் சேர்ந்த நபரைக் காதலித்ததற்காக மகளின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் ரத்தோட். இவரது மனைவி உயிரிழந்துவிட்டார். தீபக் ரத்தோட் சமீபத்தில் தனது மகள் வேறு சாதியைச் சேர்ந்தவரைக் காதலிப்பது தெரிந்ததால் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், 19 வயதேயான தனது மகளை அவரின் இளைய மகள் முன்னிலையில் கழுத்தை நெறித்துக் கொன்றார். காதலித்தால் உனக்கும் இதே கதி என்று அந்தப் பெண்ணையும் மிரட்டியுள்ளார்.

பின்னர் தனது சகோதரர் லால்ஜி ரத்தோட் உதவியுடன் கிராமத்து மயானத்தில் யாருக்கும் தெரியாமல் தகனம் செய்தார். மனைவியின் உறவினர்கள் அந்தப் பெண் குறித்து விசாரித்தபோது விஷம் குடித்ததாகத் கூறினார். இதனால் அவர்மீது சந்தேகம்கொண்ட உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்தனர்.

காவல்துறையினர் விசாரித்ததில் அவர் தனது 19 வயது மகளைக் கொலை செய்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆணவக்கொலை செய்த தீபக் ரத்தோட் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.