மடு தம்பனைக்குளம் முத்து மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூசை உபகரணங்கள் அன்பளிப்பு.

மன்னார், மடு, தம்பனைக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு மடு பிரதேசச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி பூசை உபகரணங்கள் இன்று ஆலய நிர்வாகத்தினரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன.
குறித்த உபகரணங்கள், வவுனியா குருமன்காடு காளியம்மன் மற்றும் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தினராலும் வவுனியா மாவட்டத்தின் பிரபல வர்த்தகர் இ.சிவசுப்பிரமணியம் ஆகியோராலும் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன.
கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தனால் ஒருங்கிணைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பூசை உபகரணங்களை ஆலய நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
குறித்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன் . கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.