பத்தளந்த அறிக்கை – 22 ஆண்டுகளுக்கு முன்னரே தாக்கல் செய்யப்பட்டதுதான்?

“வரலாற்று சிறப்புமிக்க பணி” என்று கூறி, உணர்ச்சிகரமான உரையுடன் சபை தலைவர் பிமல் ரத்நாயக்க தாக்கல் செய்த பத்தளந்த கமிஷன் அறிக்கை, 22 ஆண்டுகளுக்கு முன்பு விஜயபால மெண்டிஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அதே அறிக்கை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா அமைப்பாளர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார். (வருண ராஜபக்ச முன்னால் JVPயின் முக்கிய உறுப்பினராவார்.)

அதன்படி, பிமல் ரத்நாயக்க நேற்று (14) பாராளுமன்றத்தில் “ஜனாதிபதி செயலகத்தின் இருண்ட மூலையில் தூசடைந்திருந்த இந்த ஆவணத்தை உலகிற்கு கொண்டு வந்தோம்” என்று கூறியது தவறானது என வருண ராஜபக்ச கூறுகிறார்.


மேலும், 208 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் இல்லை என்றும், பத்தளந்த கமிஷனின் சாட்சியங்களுடன் கூடிய முழு அறிக்கை 4000 பக்கங்களுக்கு மேல் இருக்கும் என்றும் ராஜபக்ச கூறினார். அந்த 4000 பக்க அறிக்கையில் கூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட கமிஷன் 1948 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க விசாரணை கமிஷன் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கமிஷன் என்பதால், சட்டப்பூர்வ தண்டனைகளை விதிக்கக்கூடிய அதிகாரம் கொண்ட கமிஷன் அது அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.

வருண ராஜபக்ச தனது யூடியூப் சேனலில் வீடியோ மூலம் இதுகுறித்து கருத்து தெரிவித்தார்.

(வருண , முன்னாள் JVP பிரசார பகுதியினது தலைமை பதவியில் இருந்தவர் என்பது மேலதிக தகவல்)

 

Leave A Reply

Your email address will not be published.