மெதிரிகிரிய இசை நிகழ்ச்சியில் குழப்பம்: ஷான் புத்தா கைதானதால் வன்முறை – வஸ்தி வராததால் ரசிகர்கள் வெறுத்து போயினர் , மேடையை நொறுக்கி சேதமாக்கினர்!

பொலன்னறுவை மெதிரிகிரியவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி பெரும் குழப்பத்துக்குள்ளானது. அவதார் இசைக்குழுவின் நிகழ்ச்சியில், ஷான் புத்தா, வஸ்தி, மற்றும் ஹனா ஆகியோர் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால், ஷான் புத்தா அண்மையில் கைது செய்யப்பட்டதால் , அவர் வர முடியவில்லை, அவருக்குப் பதிலாக ரொமேஷ் பங்கேற்றார். ஹனாவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார், ஆனால் வஸ்தி வருவார் எனக் கூறப்பட்டதால் ரசிகர்கள் அதிகாலை 1.20 மணி வரை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவரது வருகை எதுவும் இல்லாமல், ஒன்றுரை மணிக்கு நிகழ்ச்சி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் அதிருப்தியுடன் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய், விஐபி டிக்கெட் இரண்டாயிரத்து ஐநுறு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி முறையாக நடத்தப்படாமல் இடையில் நிறைவு செய்யப்பட்டது என்பதால், ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர்.
கோபமடைந்த ரசிகர்கள் மேடையை நோக்கி கடுமையாக தாக்க தொடங்கினர். பொலன்னறுவை காவல்துறையினர் தலையிட்டும், பெரிய அளவில் , ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மேடை மற்றும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது, ஆனால் முழுமையான விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இசைக்கலைஞர்கள் வருவார்கள் என உறுதி அளித்தும், அது நிறைவேறாததால் ரசிகர்களது எதிர்ப்பு வன்முறையாக வெடித்தது.