“திரும்பும் இடமெல்லாம் திருப்பாச்சி… விஜய குமாரதுங்க படுகொலை விசாரணை ஆணையத்தின் அறிக்கை கூட பாராளுமன்றத்திற்கு…”

பத்தலந்த ஆணையத்தின் அறிக்கையுடன், மேலும் மூன்று ஆணையங்களின் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கூறுகிறார்.
அவற்றில் ஒன்று விஜய குமாரதுங்க படுகொலை விசாரணை ஆணையத்தின் அறிக்கை என்றும், அவற்றை வரும் நாட்களில் சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
1989 காலகட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் 16 அமைப்பாளர்களும், ஆறாயிரத்து முந்நூறு ஆதரவாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாகவும் ஆணையங்களை அழைத்து பேச ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.