பத்தளந்த கமிஷன் அறிக்கையால் ஒன்றும் நடக்காது – ஷானக்கியனின் ஷானக்கிய கணிப்பு!

பத்தளந்த கமிஷன் அறிக்கையுடன் மக்கள் விடுதலை முன்னணி , (ஜே.வி.பி) செய்த மனித கொலைகளின் பட்டியலும் வெளியாகும் என்பதால், இந்த கமிஷன் அறிக்கையால் எதுவும் நடக்காது என்று, தான் கூறுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷானக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி விரும்பாத நிலையில்தான் பத்தளந்த கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால், முன்னணி சோசலிசக் கட்சி (பெரட்டுக்காமீ சமஜவாதி பக்ஷய), மக்கள் விடுதலை முன்னணியை இன்னும் பல துண்டுகளாக உடைத்துவிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்ததாக அவர் கூறினார்.

அவர் மேலும் ,
“பத்தளந்த அறிக்கையை தாக்கல் செய்வதன் மூலம் எவருக்கும் தண்டனை கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. எனக்குத் தெரிந்தவரை, ஜே.வி.பி.யில் உள்ள இந்த தலைவர்கள் அந்த நாட்களில் 18, 19, 20 வயதுடையவர்கள். 88-89 பத்தளந்த கமிஷன் மூலம் ஜே.வி.பி செய்த கொலைகள் பற்றிய பட்டியலும் இப்போது வெளியாகிறது. அது பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அறிக்கையை தாக்கல் செய்ய ஜே.வி.பி.யில் உள்ள பலர் விரும்பவில்லை.”

“இதன் மூலம் எதுவும் நடக்காது. இங்கு தாக்கல் செய்வது மட்டுமே நடக்கும். பத்தளந்த கமிஷனுக்கும் அதுதான் நடக்கும்… நான் இன்று கணித்து சொன்னேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.”

“இந்த கமிஷன் தாக்கல் செய்யப்படாவிட்டால், முன்னணி சோசலிசக் கட்சியின் , குமார் குணரத்னம் கட்சி ஜே.வி.பி.யை இன்னும் பத்து துண்டுகளாக உடைத்துவிடும். அந்த பயத்தில்தான் இதை தாக்கல் செய்தார்கள். இதைத் தவிர, பத்தளந்த கமிஷனுக்கு இனி எதுவும் நடக்காது.”

“சபாநாயகர் நேற்று உணர்ச்சிவசப்பட்டதை நான் பார்த்தேன். இதுபோன்ற விஷயங்களில் நாங்களும் உணர்ச்சிவசப்படுகிறோம். எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்பட்டால் நல்லது.”

தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கவனிப்பதில் இதுவரை எந்த அரசும் உணர்ச்சிவசப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.