Telegram உரிமையாளர் பிணை நிபந்தனையில் மாற்றம்.

Telegram செயலியின் உரிமையாளர் ,பாவெல் டூரோவ் (Pavel Durov) பிரான்ஸைவிட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் பிரான்ஸைவிட்டு வெளியேறக் கூடாது என்பது பிணை நிபந்தனைகளுள் ஒன்றாக இருந்தது.
தற்போது அந்த நிபந்தனைகள் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளன.
Telegram செயலியில் தீவிரவாத, சட்டவிரோதத் தகவல்களை அவர் கட்டுப்படுத்தத் தவறினார் என்பதையொட்டிப் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
சென்ற ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் டூரோவ் பாரிஸுக்கு அருகே விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
பிறகு அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது அவர் பிரான்ஸைவிட்டு பல வாரங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாய் AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.
டூரோவ் மார்ச் 15ம் திகதி துபாய்க்குப் புறப்பட்டதாக நம்பப்படுகிறது.