சர்ச்சைக்குரிய கார் விபத்து வீடியோ நீதிபதியுடையது அல்ல.

கொட்டிகாவத்தை பகுதியில் நடந்த கார் விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14ம் திகதி சொகுசு பென்ஸ் கார் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதிய விபத்து தொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் பேஸ்புக் மூலம் நேரலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பென்ஸ் காரில் வந்த நபர் தன்னை நீதிமன்ற நீதிபதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், ஒருவர் விபத்துக்குள்ளானதும் தப்பிச் செல்ல முயன்றதாகவும் அவர் கூறுகிறார்.
இருப்பினும், எமது தரப்பினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த காரை ஓட்டி வந்தது நீதிமன்ற நீதிபதி அல்ல, சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.