தேசபந்துவின் மனு நிராகரிக்கப்பட்டது.. உடனடியாக கைது செய்ய உத்தரவு.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதை தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட்டை சட்டப்படி செயல்படுத்த வேண்டும் என்று பொலிஸாருக்கு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவின்படி, நீதிபதி (பொறுப்பு தலைவர்) மொஹமட் லஃபார் தலைமையிலான இரு நபர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
இதற்கிடையில், ரிட் மனுவை கட்டணத்துடன் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்தது.
மாத்தறை நீதிவான் பிறப்பித்த கைது வாரண்ட்டை இடைநிறுத்த உத்தரவிட வேண்டும் என்று தேசபந்து தென்னகோன் தனது ரிட் மனுவில் கோரியிருந்தார்.