வீடு ஒன்றை நோக்கி சாரமாரியான துப்பாக்கிச் சூடு…

மிதிகம பாதேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை நோக்கி இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் வீட்டின் முன்பக்க ஜன்னல் மற்றும் சுவரில் பல துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.