சரியாக படிக்காத காரணத்தால் குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை!

குழந்தைகள் சரியாக படிக்காத காரணத்தால் தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ONGC நிறுவனத்தின் பணியாற்றி வருபவர் 37 வயதான சந்திர கிஷோர்.

இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஜா சாய் ராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜோஷித் (7) மற்றும் நிகில் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் ஒருவர் LKGயும், மற்றொருவர் முதலாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என தந்தை சந்திர கிஷோர் வருத்தமடைந்துள்ளார்.

சரியாக படிக்காவிட்டால் குழந்தைகள் போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ள கடினம் என கவலையடைந்துள்ளார். இதனால் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்துள்ளார்.

இந்நிலையில் ஹோலி பண்டிகையன்று, அவரது மனைவியை அலுவலகத்தில் விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்து குழந்தைகளின் கை கால்களை கட்டி, ஒரு வாளியில் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

அதன்பின், வீட்டில் உள்ள மின்விசிறியில் அவரும் தூக்கில் தொங்கியுள்ளார். அவரது மனைவி வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டி இருந்துள்ளது. கணவரை அலைபேசியில் அழைத்த போதும் அவர் எடுக்கவில்லை.

இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, குழந்தைகள் வாளியில் மூழ்கடிக்கப்பட்டு கிடந்துள்ளனர். சந்திர கிஷோர் தூக்கில் தொங்கியுள்ளார். இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.