9 மாதங்களுக்கு பின் பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.

சுனிதா வில்லியம்ஸ் பயணம்:
பகுதி 2
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் Dragon spacecraft டவுன்
நேரடி ஒளிபரப்பு
நாசா, Watch here… https://plus.nasa.gov
https://plus.nasa.gov/video/to-an-asteroid-and-back/#fullscreen-player
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் தத்தமது இருக்கைகளில் அமர்ந்து, தயாரானதும் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. நாசா திட்டமிட்டிருந்தபடி, இந்திய நேரப்படி சரியாக காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது.
விண்கலம் தற்போது பூமியை நோக்கிய சுமார் 17 மணி நேர பயணத்தில் உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் அந்த விண்கலம் இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடையும். இதற்கான நேரலையை இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை சுமார் 2.15 மணியளவில் நாசா தொடங்குகிறது.
Dragon spacecraft பெருங்கடலில் எவ்வாறு இறங்கும்?
விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் பயணம் ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினரை சுமந்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கலம் அதிவேகமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். அப்போது சுமார் 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அது தாங்க வேண்டியிருக்கும். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் இருவரையும் இந்த அதீத வெப்பத்தில் இருந்து வெப்பப் பாதுகாப்புக் கவசங்கள் காத்து நிற்கும்.
புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் டிராகன் கலம் விரைவாகவே தனது வேகத்தை இழந்துவிடும். அப்போது, கலத்திற்குள் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமான ஈர்ப்பு விசையை எதிர்கொள்வார்கள்.
இறுதிக்கட்டத்தில் 4 பெரிய பாராசூட்கள் விரியும். அப்போது, கலத்திற்குள் இருக்கும் நால்வரும் அதிர்வை உணர்வார்கள். ஆனால், இந்த செயல்தான் டிராகன் கலம் தனது வேகத்தை குறைத்து, பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்க வழிவகுக்கும்.
Update 2
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார்.
அவர்கள் பயணித்து வந்த டிராகன் விண்கலம், இந்திய நேரப்படி (19.03.2025) சுமார் அதிகாலை 3.27 மணி அளவில் ஃபுளோரிடா அருகே கடலில் இறங்கியது.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரோஸ்கோஸ்மோஸ், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.