காவல்துறை ஊடகப் பேச்சாளர் ராஜினாமா

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து விலக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக்க மனதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை பதில் காவல்துறைத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.