நாற்காலியில் கட்டி எரிக்கப்பட்ட அதிகாரி

தோட்ட அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டப்பட்டு நாற்காலியில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டதாக நாகொட மாப்பலகம பகுதியில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

மாப்பலகம குடா குடமாலன தேயிலை தொழிற்சாலையில் இந்த எரிப்பு சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

தீயில் அதிகாரி அலறிய சத்தம் கேட்டு அங்கு வேலை செய்பவர்கள் வந்து அவரை மீட்டு தீயை அணைத்துள்ளனர்.

தீயில் அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் உள்ளன.

சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.