இந்தியப் பொருளியல் ஜப்பானை விஞ்சும்

ஜப்பானின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இந்தியா விஞ்சி 2024-25ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் உலகின் நாலாவது ஆகப் பெரும் பொருளியலாக உருவெடுக்கும் என்று அனைத்துலகப் பண நிதியத்திலிருந்து பெறப்படும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி இரண்டு மடங்கிற்கும் அதிகமாகியுள்ளது. 2015ல் 2.1 ட்ரில்லியன் டாலர் ஆக இருந்த ஜிடிபி 2025ல் 4.3 ட்ரில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது.

தற்போது ஐந்தாவது ஆகப் பெரும் பொருளியலான இந்தியா, 4.4 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள ஜப்பானியப் பொருளியலின் அளவுக்கு நெருங்கி வளர்வதாக அனைத்துலக பண நிதியத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளியல் 105 விழுக்காடு பெருகியுள்ளது. ஆனால் அதே காலகட்டத்தின்போது ஜப்பானின் ஜிடிபி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணவில்லை.

இந்தியாவின் இந்த வளர்ச்சி தொடர்ந்தால், 4.9 ட்ரில்லியன் மதிப்புள்ள ஜிடிபியைக் கொண்டுள்ள ஜெர்மனியை அந்நாடு விஞ்சக்கூடும்.

ஜி7, ஜி20, பிரிக்ஸ் ஆகிய அமைப்புகளின் உறுப்பு நாடுகளில் மற்ற நாடுகளைக் காட்டியும் இந்தியாவின் வளர்ச்சி நன்றாக இருப்பதாக வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

உலகின் ஆகப் பெரும் பொருளியலைக் கொண்ட அமெரிக்காவின் மதிப்பு 30.3 ட்ரில்லியனாகவும் சீனாவின் பொருளியல் மதிப்பு 19.5 ட்ரில்லியனாகவும் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.