பிரிட்டனில் வலம் வரும் ஓட்டுநர் இல்லா வாகனங்கள் (Video)

பிரிட்டனில் தானியக்க வாகனங்களைக் கொண்டுவருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லாக் கார்கள் சோதனை செய்யப்படுகின்றன.
கேமராக்கள், உணர்கருவிகள், நவீனத் தொழில்நுட்பம்.
இப்படிப் பல அம்சங்களை அவை கொண்டுள்ளன.
அவை அனைத்தும் சேர்ந்து எல்லாத் திசையிலும் நடப்பதைக் கவனிக்கும் ஆற்றலைக் காருக்குக் கொடுக்கின்றன.
காரில் உள்ள கேமராக்கள் சாலைகளையும் மற்ற வாகனங்களையும் மட்டும் கவனிக்கவில்லை.
அவை பாதசாரிகளையும் கவனிக்கின்றன.
முக அடையாளத்தைக் கொண்டு அவர்கள் சாலையைக் கடக்கப்போகிறார்களா இல்லையா என்பதைக் கணித்துவிட முடியும்.
பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் தரவுகளைப் பெறும் ஆற்றலும் காருக்கு உண்டு.
அதனால் ஒரு வளைவை நெருங்கும்போது அதற்குப் பின்னால் வாகனம் ஏதேனும் நிறுத்தப்பட்டிருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறிந்து கார் அதைச் சுற்றிப்போகும்.
போக்குவரத்து அதனால் சுமுகமாகிறது.
ஓட்டுநர் இல்லாமல் சாலையில் செல்ல உதவும் அடிப்படை அம்சங்களை உருவாக்குவதில் கார் நிறுவனங்களுக்கும் தானியக்கக் கார் மென்பொருள் நிறுவனங்களுக்கும் பிரச்சினை இல்லை.
ஆனால் தானியக்க வாகனங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதில்தான் சிக்கல்.
எதிர்பார்த்ததைவிட அதற்கான செலவும் அதிகம்.