செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கி ஆறு பேர் பலி.

எகிப்தின் பிரபலமான செங்கடல் சுற்றுலா தலமான ஹர்கடாவில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 45 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும், செங்கடல் கவர்னர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி 29 பேர் அவசரகால குழுக்களால் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை, இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.