அம்பலாங்கொடை பாதாள உலக துப்பாக்கிச் சூடு ஆரம்பம்

இன்று 31ஆம் தேதி அதிகாலை அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பகுதியில் வீட்டில் இருந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுடப்பட்ட பின் , சுட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் 30 வயதுடைய கொக்கல்ல, அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர்.
காயமடைந்தவருக்கும் வேறு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச் சூடுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.