ட்ரம்பை வம்புக்கு சீண்டும் சீனா! சீனாவும் அமெரிக்காவுக்கு பாரிய வரி விதிப்பு!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய இறக்குமதி வரி முறைக்கு பதிலடியாக, எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் அமெரிக்க இறக்குமதிகள் மீது 34% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 10% வரி விதிப்பதற்கும், அமெரிக்காவுடன் அதிக வர்த்தக உபரியைக் கொண்டுள்ள 60 நாடுகளுக்கு அடிப்படை வரியுடன் கூடுதல் வரிகளை விதிப்பதற்கும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 1% வீழ்ச்சியடைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவு காரணமாக இருக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.