அமெரிக்காவில் ‘Trump Go Home ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.. அனைத்து மாகாணங்களிலும் மக்கள் எதிர்ப்புகள்..

புதிய வரி கொள்கைகளை அறிவித்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அவரது வணிக நண்பரான எலான் மஸ்கிற்கும் எதிராக அமெரிக்காவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் , நேற்று முன்தினம் முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதியின் கொள்கைகளால் அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், வெள்ளை மாளிகை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனாதிபதியின் நிலைப்பாடு தெளிவானது என்றும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றை அவர் எப்போதும் உறுதி செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.