கொழும்பு மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தம்: நேற்று நீதிமன்றம் உத்தரவு

வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கொழும்பு மாநகர சபை உட்பட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரணைக்கு ஏற்க அனுமதித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை , மே மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.