தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் இன்று ஒருவர் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு -நீர்கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டிலேயே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீதுவை – லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சீதுவை – லியனகேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
பாதாள உலகக் கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
……………