அமெரிக்காவில் இலங்கையின் ஆடை வரி 50%-76% வரை உயர்வு.. வாங்குபவர்கள் ஓடர்களை நிறுத்துகின்றனர்…

இலங்கையின் ஆடைகளை , அமெரிக்க சந்தைக்காக வாங்குபவர்கள் தற்போது ,ஓடர்களை ரத்து செய்துவிட்டதாக ஒருங்கிணைந்த ஆடை சங்கங்களின் மன்ற முன்னாள் தலைவர் நோயல் பியதிலக தெரிவித்தார்.

வாங்குபதற்கு தயாராக உள்ள சிலர் தற்போது நஷ்டத்தை பகிர்ந்து கொள்வதற்கான முன்மொழிவுகளை முன்வைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இதுவரை அமெரிக்க சந்தையில் நுழைவதற்கு 6% முதல் 36% வரை வரி விதிக்கப்பட்டிருந்ததாகவும், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு சேர்க்கப்பட்டவுடன் அதன் குறைந்தபட்ச சதவீதம் 50% முதல் 76% வரை உயரும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க சந்தைக்காக வாங்குபவர்கள் இலங்கையைத் தவிர்த்துவிட்டு மற்ற லாபகரமான சப்ளையர்களைத் தேடிச் செல்வார்கள் என்றும், இதன் மூலம் இலங்கையின் ஆடைத் துறையில் பலர் வேலைகளை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.