தேசபந்துவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம் !

பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
தலா பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சொந்தப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
2023 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.