அன்னராசாவின் செய்தி தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட தெளிவுபடுத்தல் விளக்கம்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்தார் என்று ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தல் விளக்கத்தை வழங்கியுள்ளது.

‘யாழ்ப்பாணக் கடலை ஆக்கிரமிக்கும் சீனக் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம். கடந்த 11ஆம் திகதி வேலணைக்கு வரும் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கவனத்துக்கும் இந்த விடயத்தைக் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றோம். இவை தொடர்பில் முற்கூட்டியே அறிந்துகொண்ட ஆளுநர் செயலகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிரதமர் வருவதற்கு முன்பாக, கடல் அட்டைப் பண்ணைகளுக்காகக் கடல் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்ரிக் தடுப்பு வேலிகள் அவசர அவசரமாக அகற்றப்படுகின்றன’ என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று ‘ஆளுநர் செயலகம் எந்தவொரு தகவல்களையும் வழங்கவில்லை’ என்று தெளிவுபடுத்துகின்றோம். அத்துடன் இந்த விடயத்துக்கும் ஆளுநர் செயலகத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதையும் அறியத்தருகின்றோம் என்று வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.