சீனாவிற்கு எதிரான வரி கொள்கையில் மாற்றம்: டிரம்ப்பின் புதிய முடிவு!

ஜனாதிபதி டிரம்ப் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் கணினிகளுக்கு வரிவிலக்கு அளிக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனா உட்பட பல நாடுகளிலிருந்து வரும் ஸ்மார்ட்ஃபோன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு சாதனங்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அறிக்கையில், பல நாடுகளுக்கான டிரம்பின் 10% உலகளாவிய வரி மற்றும் அதைவிட பெரிய சீன இறக்குமதி வரியிலிருந்து பொருட்கள் விலக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப் சீனாவுக்கு விதித்த வரிகளுக்குப் பிறகு , இதுவே முதல் குறிப்பிடத்தக்க நிவாரணமாகும். பெரும்பாலான சாதனங்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால் அவற்றின் விலை உயரக்கூடும் என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் கவலைகளுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் கணனிகளுக்கு கூடுதலாக, குறைக்கடத்திகள், சூரிய மின்கலங்கள் மற்றும் மெமரி கார்டுகள் உள்ளிட்ட பிற மின்னணு சாதனங்கள் மற்றும் கூறுகள் இவ்வாறு வரிவிலக்கு பெறுகின்றன.

ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தல்களின்படி, இந்த நிறுவனங்கள் கூடிய விரைவில் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்க தயாராக உள்ளன. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிடுகிறார்.

ஸ்மார்ட்ஃபோன் ஜாம்பவான்களான சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தற்போது முழுமையாக சீனாவைச் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதற்காக தங்கள் விநியோகச் சங்கிலியை பல்வகைப்படுத்த முயற்சித்து வருகின்றன. அவை இந்தியா மற்றும் வியட்நாமை கூடுதல் உற்பத்தி மையங்களுக்காக மாற்ற முயன்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.