இலங்கையிலிருந்து கட்டாருக்கு சென்றவர் கொரோனா காரணமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்
இலங்கையிலிருந்து கட்டாருக்கு சென்ற பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதனை அடுத்து குறித்த நபர் அதே விமானத்தில் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பை நகரிலிருந்து 60 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடந்த 17 ஆம் திகதி மாலை இண்டிகோ விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்களில் 54 பேர், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கப்பலொன்றில் பணியாற்ற வந்தவர்கள்.
மீதமிருந்த 15 பேர் கட்டாரிற்கு சொந்தமான Q.R668 விமானத்தினூடாக டோஹாவிற்கு பயணித்த நிலையில் அவர்கள் டோஹா விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட போது, அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து குறித்த நபர், அதே விமானத்தில் அதிகாலை 1.35 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கட்டாரிற்கு சொந்தமான Q.R668 விமானத்தில் சர்வதேச விமானச் சட்டநியமங்களின்படி சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடைய பயணிகள் அவர்கள் புறப்பட்ட விமான நிலையத்தில் திருப்பி விடப்பட அனுமதியிருந்த நிலையிலேயே குறித்த இந்திய பயணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கொவிட் – 19 தாக்கப்பட்டுள்ள குறித்த இந்திய நபரை மும்பைக்கு திருப்பி அனுப்ப இண்டிகோ விமானம் இல்லாத காரணத்தில் நோயாளர் காவு வண்டி மூலம் கொழும்பில் உள்ள I.D.H வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Comments are closed.