டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் மும்பை அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி அணி தற்போது இரண்டாம் இடத்திற்கு சரிந்திருக்கிறது.

ஒன்பதாவது இடத்தில் இருந்த முன்பை அணி தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இரு அணிகளும் மோதிய லீக் ஆட்டம் டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டம் இழக்க, ரியான் ரிக்கல்டன் 41 ரன்களும், சூரியகுமார் 40 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். எனினும் திலக் வர்மா தனியாளாக நின்று அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார்.

இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளுக்குப் பின் விளையாடும் கருண் நாயர் அதிரடி காட்டினார். மும்பை அணியின் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் அவர் சிதறடித்தார். 5 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் என 40 பந்துகளில் அவர் 89 ரன்கள் குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்து வீச்சில் போல்ட் ஆனார். கருண் நாயர் ஆட்டம் இழந்தது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்பட்டது.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ராகுல் 15 ரன்களிலும் கேப்டன் அக்சர் பட்டேல் 9 ரன்களிலும் ஆட்டம் இழக்க இறுதி கட்டத்தில் ஆஸ்டோஸ் சர்மா விப்ராஜ் ஜோடி சேர்ந்து டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி மூன்று ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 18 வது வரை மிட்செல் சாண்ட்னர் வீச அதனை விப்ராஜ் நிகம் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தார். எனினும் அந்த ஓவரில் 16 ரன்கள் சென்றது.

இதனால் 12 பந்துக்கு வெறும் 23 ரன்கள் தான் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை பும்ரா வீச ஆட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் பவுண்டரி சென்றது. இதனால் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஆட்டத்தின் நான்காவது பந்தில் டெல்லி அணி வீரர் அஸ்டோஸ் சர்மா இரண்டாவது ரன் ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து அடுத்த பந்தில் குல்தீப் களமிறகினார். அவரும் இரண்டாவது ரன் ஓடும்போது ரன் அவுட் ஆனார்.

இதனை அடுத்து டெல்லி அணிக்கு கைவசம் ஒரு விக்கெட் தான் இருந்தது. அப்போது பும்ரா வீசிய 19 ஆவது ஓவரின் கடைசி பந்திலும் மோகித் சர்மா ரன்அவுட் ஆக மும்பை அணி தொடர்ந்து மூன்று ரன் அவுட்டுகளை பெற்று திரில் வெற்றி பெற்றது வெற்றியின் அருகே வந்து டெல்லி அணி கோட்டை விட்டது அந்த அணி ரசிகர்களை சோகமடைய வைத்தது.

Leave A Reply

Your email address will not be published.