பயங்கர கார் விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு… இரு குழந்தைகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்!

கடந்த 13ம் திகதி காலை அனுராதபுரம் – குருநாகல் பாதையில் நடந்த பயங்கர கார் விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகமான செய்தி பதிவாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் கொச்சிவத்தை, வெலிவேரியவை சேர்ந்த டொன் அஜித் பிரியந்த , பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சாரதி ஆவார். அவரோடு உயிரிழந்தவர் அவரது மனைவி.
வாகனத்தில் பயணித்த இந்த தம்பதியரின் இரு குழந்தைகளில் மகன் பலத்த காயங்களுடன் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகள் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் இந்த குடும்பத்தினர் பயணித்த வாகனம் குருநாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சாரதிக்கு தூக்கம் வந்ததால் கெத்தப்பஹுவ, கும்புக் சிசில ஹோட்டல் அருகே பாதையின் இடது பக்கமாக விலகி மரத்தில் மோதியதில் இந்த பயங்கர கார் விபத்து நிகழ்ந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.