இஸ்ரேல் விமானத் தாக்குதலில் காஸா வைத்தியசாலை அழிவு!

காஸா Strip இல் முழுமையாக இயங்கி வந்த கடைசி வைத்தியசாலையான அல் அஹ்லி வைத்தியசாலையின் ஒரு பகுதி இஸ்ரேல் விமானத் தாக்குதலில் அழிந்துள்ளது.
அந்த தாக்குதலில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை பிரிவு முற்றிலுமாக அழிந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு மாடி கட்டிடத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், வைத்தியசாலை படுக்கைகளில் இருந்த பலர் உட்பட அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
அந்த இடத்தில் ஹமாஸ் அமைப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வந்ததால் வைத்தியசாலை இலக்கு வைக்கப்பட்டதாக , IDFஇஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளன.
காஸாவில் உள்ள சிவில் அவசர சேவைப் பிரிவின்படி எந்த சேதமும் பதிவாகவில்லை.