இந்திய விஞ்ஞானிகள் சாதனை: ‘டிரோன்’ எதிர்ப்பு லேசர் ஆயுத சோதனை வெற்றி!

எதிரிகளின் ஆளில்லா டிரோன் வானூர்திகளை , துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன லேசர் ஆயுத அமைப்பை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர்.

இந்த சோதனையின்போது, பல டிரோன்கள் மற்றும் எதிரிகளின் கண்காணிப்பு கருவிகள் துல்லியமாக அழிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் DRDO மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில வினாடிகளில் பறக்கும் டிரோன்களை அழிக்கும் திறன் கொண்ட இந்த தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தற்போது இந்தியாவும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஆயுதத்தை குறைந்த செலவில் இயக்க முடியும் என்றும், ஒருமுறை தாக்குதல் நடத்த குறைந்த அளவு எரிபொருள் மட்டுமே தேவைப்படும் என்றும் DRDO தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.